தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.12

பயங்கரவாத இஸ்ரேல் முழு உலகிற்குமே ஆபத்தான பாதையில் செல்கிறது


இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசித்தாக்கியதில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலை வர் அகமத் அல் ஜாபரி கொல்லப்பட்டுள்ளார், இவரு டன் மேலும் இருவர் மரணித்துள்ளனர்.காரில் சென் றபோது காஸா வட்டகையின் தென்புலத்தில் கான் யூனிஸ் பகுதியில் இந்த நாசகார செயலை இஸ்ரே ல் அரங்கேற்றி அமைதியை குலைத்தது.இஸ்ரேல் செய்துள்ள அடாவடித்தனத்தை உலக நாடுகள் உட னடியாகக் கண்டிக்க வேண்டுமென அரபு நாடுகள் கேட்டுகொண்டுள்ளன.இத
ற்கிடையில் நிலமைகள் பாரதூரமான தடத்தில் இற ங்கப் போகும் அபாயம் தெரிவதால் எகிப்து தனது நாட்டின் இஸ்ரேலுக்கான தூ துவரை உடனடியாக கெய்ரோ அழைத்துள்ளது.
இஸ்ரேல் காஸா மீது வலிந்த தாக்குதலை ஆரம்பித்து பிரதேசம் முழுவதையும் போர்க்காடாக மாற்ற தீர்மானித்திருக்கிறது என்றும், காற்று மரத்தில் மோதும் போது ஆடுவதைத் தவிர வேறு வழி இல்லாமல் மரங்களும் ஆடுவதுபோல பாலஸ்தீன போராளிகளும் போரிட வேண்டிய இக்கட்டான நிலை வரும் என்கிறார்கள் நோக்கர்கள்.
இது மறுபடியும் பாலஸ்தீனத்தில் நெருப்பை எரித்து, தீர்வை பின்போடும் இஸ்ரேலின் நயவஞ்சக வியூகம் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.
வரும் 29 ம் திகதி பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நாவில் வாக்கெடுப்பிற்கு வருகிறது, இதைத்தடுக்க இயலாத நிலை இஸ்ரேலுக்கு உண்டு.
குண்டுவீச்சில் கறிக்கட்டையான குழந்தை
மறுபுறம் பாலஸ்தீன விடுதலை அமைப்பாக பீ.எல்.ஓவின் தலைவர் யாசர் அரபாத்தை பொலோனியம் நஞ்சூட்டி இஸ்ரேலே கொலை செய்தது என்ற சந்தேகம் சூடு பிடித்துள்ளது.
அரபாத்தின் உடல் இப்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, இதனால் பாலஸ்தீனத்தில் பதட்டமும் இஸ்ரேலிய மோசாட் மீது தீரமுடியாத வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் பராக் ஒபாமா மறுபடியும் அதிபராகியிருப்பதும் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக இருக்கிறது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி
பராக் ஒபாமா காங்கிரசில் ரிபப்ளிக்கன் கட்சியுடன் சமரசம் கண்டு பொருளியல் சிக்கலைத் தீர்க்கப்போவதாக இன்று அறிவித்துள்ளார், அவருக்கு இஸ்ரேல் பற்றி யாதொரு கரிசனையும் கிடையாது.
ஈரானுக்கு எதிரான போரை நடாத்த இஸ்ரேல் விடுத்த அழைப்பையும் ஒபாமா நிராகரித்துவிட்டார், இப்போது இஸ்ரேல் திரிசங்கு நிலைக்கு வந்துள்ளது.
இந்தளவு பாதகமான நிலை இஸ்ரேலுக்கு இருக்கிறது.. இதற்குக் காரணம் இதுவரை கடைப்பிடித்த அமைதியே என்று இஸ்ரேல் கருதுகிறது.
இப்படியாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்திலும், சர்வதேச மட்டத்திலும் சாதகமாக யாதொரு நிகழ்வுகளும் நடக்கவில்லை, ஆகவே போரை மூட்டுவதே இஸ்ரேல் தன்னை பாதுகாக்க மீதமுள்ள கடைசி வழியாக தெரிகிறது.
சிரியாவுடனோ அல்லது துருக்கியுடனோ தவறினால் லெபனானுடனோ, அல்லது ஈரானுடனோ போரை ஆரம்பித்து தன்னை சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வியூகத்தை உடைக்க இஸ்ரேல் முயன்ற இஸ்ரேல் இப்போது மீண்டும் பாலஸ்தீனத்திற்குள்ளாவது நுழைய முயல்கிறது.
யாருடனாவது ஒரு வலிந்தபோர் நடாத்த இஸ்ரேல் களம் இறங்கும் என்றும் அது மத்திய கிழக்கு முழுவதையும் தீக்காடாக்கும் அபாயம் நிறைந்தது என்ற அச்சமும் படர ஆரம்பித்துள்ளது.
அடுத்து என்ன எந்த நேரமும் போர் வெடிக்க வாய்ப்புள்ளது, இஸ்ரேல் காஸாவிற்குள் நுழைய ஆயத்தமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த வன்செயல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநாவின் பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடுகிறது.
இந்த வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புக் கவுன்ஸிலின் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இஸ்ரேலிய நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று அரபு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், பாலத்தீன ராக்கட் தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது.
முன்னதாக 3 ஹமாஸ் போராளிகள் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இறந்த பாலத்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.

0 கருத்துகள்: