பாதிக்கப்பட்ட அமெரிக்காவை மீண்டும் புதிய சூறாவளி தாக்க இருக்கிறது. அமெரிக்காவின் கடற்கரை பகுதியான நியூயார்க் மற்றும் நியூஜெர்சிக்கு இந்த புதிய சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. சூறாவளியினால் நியூயார்க் நகரில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. சாண்டி சூறாவளியினால் இப்பகுதியில்
தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் இல்லாத நிலையில் புதிய சூறாவளியினால் தொடர்ந்து மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மேலும்,
புதிய சூறாவளியின் தாக்கத்தினால் கடலில் அலைகள் ஆவேசமாக உள்ளன. மேலும், பனி பொழிவு மற்றும் பலத்த காற்றினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் கூறும்போது,சாண்டி சூறாவளியினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும், மோசமான வானிலை காணப்பட்ட போதிலும் தற்போது பெரிதாக எந்த இடமாற்றமும் மேற்கொள்ள தான் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக