தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.12

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கர மோதல் : 10 க்கு மேற்பட்டோர் பலி?


கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இன்றி ரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 13 க்கு மேற் பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 45 க்கு மேற் பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.கைதிகளுக்கும் சிறைச்சாலை அ திகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு ம் இடியில் இம் மோதல் வெடித்துள்ளது.  இன்று கா லை வெலிக்கடை சிறைச்சாலை விசேட தேடுதல் வேட்டையை
ஒன்றை காவல்துறையினர் தொடங்கியிருந்ததற்கு, கைதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சிறையினுள் பல்வேறு குற்றச்சாட்டுக் கள் நடைபெறுகின்றன எனும் குற்றச்சாட்டிலேயே இத்தேடுதல் வேட்டையை காவல்துறையினர் நடத்தியிருந்தனர்.

எனினும், இந்நடவடிக்கையின் போது கைதிகள் அதிகாரிகளை தாக்கியதை அடுத்து, கண்ணீர் புகை குண்டு தாக்குதலை காவல்துறையினர் நடத்தியுள்ளனர். எனினும் நிலைமை கட்டுக்கடங்காது போகவே, விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலிலேயே கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறைக்கைதிகள் சிலர் சிறையின் ஆயுதக்களஞ்சிய சாலையை உடைத்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனதுடன், காவல்துறையினரை பணயக்கைதிகளாகவும் பிடித்துள்ளனர். இதையடுத்து அவர்களும் பதில் தாக்குதல் நடத்திவருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வன்முறைகளால் குறித்த வெலிக்கடை பகுதி கலவரபூமியாக மாறியுள்ளதுடன், கைதிகள் பின்மதில் சுவரை உடைத்து தப்பிச்செல்லும் அபாயமிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மேலும் வெலிக்கடை சிறைச்சாலையை அண்டிய பேஸ்லைன் வீதியின் போக்குவரத்தும் இதனால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வன்முறைகளில் தமிழ்சிறைக்கைதிகளுக்கும் பாதிப்பு நிலவலாம் எனும் அபாயம் காணப்படுகிறது. இதுவரை கொழும்பு தேசிய வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற சடலங்கள் சிங்களவர்களுடைய சடலங்களே என கூறப்படுகிறது.

எனினும் இத்தகவல்கள் எதனையும் உத்தியோகபூர்வமக உறுதிப்படுத்த முடியவில்லை. அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையடுத்து தமிழ்க்கைதிகள் சிலர் இராணுவ மற்றும் காவல்துறை தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்: