தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.12

42 ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டு பிடிப்பு


பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கு ம் 'HD 40307' எனப் பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன் றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை  வானிய லாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உ டைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வ ருவதாகவும் அவர்கள் கூறி
யுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவியலாளர்கள் (Astrophysicists) கூறுகின்றனர்.

மேலும் இக்கிரகம் சுற்றி வரும் நட்சத்திர்மான HD 40307 நமது சூரியனை விட சற்று சிறியது என்பதுடன் ஆரெஞ்சு நிற ஒளியை வெளிப்படுத்தும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மற்றும் பூமியைப் போன்ற கிரகம் ஆகியவை சிலியில் உள்ள ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகத்தின் தெற்கு அவதான நிலையமான 'சில்லா' இருந்து கண்டு பிடிக்கப் பட்டன.

HD 40307 நட்சத்திரம் மொத்தம் 6 கோள்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது குறித்த அவதானத்தின் அடுத்த கட்டமாக விண்ணில் நிறுத்தப் பட்டுள்ள அதிக வலுவுள்ள தொலைக்காட்டிகள் மூலம் இப் பூமி போன்ற கிரகம் எந்த மூலகங்களால் ஆக்கப் பட்டுள்ளது என்பதை அறிவதே எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: