தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.12

சவுதியில் எரிபொருள் டாங்கி வெடித்ததில் 22 பேர் பலி (வீடியோ)


இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைநகர் ரி யாத்தில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டா ங்கி ஒன்று பாலம் அருகே உள்ள கட்டடங்கள் மற்று ம் வாகனங்களுடன் மோதி வெடித்துச் சிதறியது.இத னால் கட்டடங்களிலும் கார்களிலும் தீப்பிடித்தது. இ ந்த விபத்தினால் சுமார் 22 பேர் பலியானதுடன் 110 பேர் காயமடைந்திருப்பதாகவும்  அதிகாரிகளும் நே ரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.சவுதியின் கிழ க்கு மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளுடன் கூடிய நகரில் அமைந்துள்ள தேசிய
பாதுகாப்பு கட்டடத்து க்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது மீட்புப் பணிகள் துரிதமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் இந்த விபத்தில் பலியானவர்கள் தொகை அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகின்றது.

                                                     அதிவேக பாதையிலிருந்து கட்டுப்பாடை இழந்து பாலத்துக்கு அண்மையில் இந்த டாங்கி மோதி விபத்துக்குள்ளானது எனக் கூறப்பட்ட போதும் இச்சம்பவத்துக்குப் பின்னணியில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் உள்ளதா எனவும் அதிகாரிகள் ஐயப்படுகின்றனர். இதேவேளை சவுதியின் தீவிர கட்டுப்பாடுகளால் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குத் தகவல் அளிப்பதற்கு அஞ்சுவதுடன் விபரம் தெரிவித்த ஒரு சிலரும் தமது பெயரை வெளிவிட விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: