தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.12

சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீன போர்க்கப்பல்கள் : ஜப்பானில் பதற்றம்


சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீனா வின் இரு போர்க் கப்பல்கள் காணப்பட்டதையடுத்து ஜப்பானில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகி றது.அடையாளம் காணப்பட்ட இரு போர்க் கப்பல்க ள் உட்பட சீனாவின் சில கப்பல்கள், ஜப்பானும் சீனா வும் சொந்தம் கொண்டாடி போராடி வரும் தீவுத் தொ குதியான 'சென்காக்கு' அருகே காணப்பட்டதை அடு த்து ஜப்பான் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப் பதுடன், டோக்கியோ மற்றும் பீஜிங்குடனான உற விலும்
அழுத்தங்களை இது அதிகரித்துள்ளது.டோக்கியோவில் இருந்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் இது பற்றிக் கருத்துரைக்கையில், 'ஜப்பானின் 'யொனாகுனி' தீவில் இருந்து தென் கிழக்குத் திசையில் 49 Km களுக்கு அப்பால் 7 சீன போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதை ஜப்பானிய விமானம் ஒன்று அவதானித்துள்ளது எனத் தெரிவித்திருந்தார்.'

'யொனாகுனி' எனும் தீவு ஜப்பானியர்களால் சொந்தம் கொண்டாடப் படுவதை சர்வதேச சமூகம் ஏற்கனவே அங்கீகரித்த ஒன்றாகும். ஜப்பானிய அரசு சீன போர்க் கப்பல்கள் பற்றி மேலும் தெரிவிக்கையில், 'இரு போர்க் கப்பல்களும் இவற்றில் ஒன்று ஏவுகணைகளைத் தாங்கியுள்ளது எனவும் மேலும் இரு நீர்மூழ்கிக் கப்பல்களும் ஒரு பொருட்களைக் காவிச் செல்லும் கப்பலும் இதில் அடங்குகின்றன'

இக் கப்பல்கள் பசுபிக் கடலில் இருந்து கிழக்கு சீனக் கடலுக்கு வட திசையில் நகர்வை மேற்கொண்டுள்ளன. மேலும் இக் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக ஜப்பானின் தீவுகளுக்கு சீனா நோட்டமிட முயற்சிக்கவில்லை எனவும் இருந்த போதும் சீனாவின் போர்க்கப்பல்களைத் தாம் முற்றிலும் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த கப்பல்கள் அனைத்தும் பசிபிக் கடலில் போர்ப்பயிற்சியை முடித்துக்கொண்டு சீனா திரும்பி வந்து கொண்டிருப்பவை என்றும் இதையிட்டு ஜப்பான் பதற்றமடையத் தேவையில்லை எனவும் சீன தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: