தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.12

லிபியாவில் அமெரிக்க தூதரக வன்முறைக்கு ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பு!

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகம்மது நபி அ வர்களை கொச்சைப்படுத்தி அமெக்கர் பாதிரியார் எடுத்த திறைப்படம் இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம் அந்த திரைப்படத்தின் 15 நிமிட ட்ரைலர் கடந்த மாத ம் யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டதைபார்த்து உலக முஸ்லீம்கள் அதிர்ந்தனர் படம் எடுதவனை கண்டித்தும் அவனை கைது செய்யக்கோறியும் அத னை யூ டியூப்பிலிருந்து நீக்ககோறியும் உலகம் மு ழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திவந்தனர் அவனை கைது செய்யாமல் அவனுக்கு அமெரிக்கா வக்காலத்து வாங்கியதால்  
முஸ்லிம்கலின் கோபம் அமெரிக்க அரசுமீதும் தி ரும்பியது அமெரிக்க தூதரங்கள் முற்றுகை போராட்டமும் சில நாடுகளில் தூ தரகம் அடித்தும் நொருக்கப்பட்டது கடந்த மாதம் சென்னையிலும் தூதரகம் தாக்குதலுக்கு உண்டானது அதுபோல் லிபியாவில் போராட்டம் உக் கிரம டைந்து லிபியாவின் அமெரிக்க தூதுவர் மற்றும் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 6ம் திகதி அமெரிக்க தேர்தல் வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இவ்விவகாரம் ஒபாமாவுக்கு வீணான தலையிடியை கொண்டுவந்து விடக் கூடாது என்பதற்காக ஹிலாரி கிளிண்டன் இச்சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் 'இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இதில் எம்மால் அவசரப்பட முடியாது. ஆனால், நிச்சயமாக நாம் பின்வாங்க மாட்டோம். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்' என்றார்.

'பெங்காஸியில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஒபாமா அரச நிர்வாகவே பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்க லிபியாவுக்கான தூதுவர் கிரிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் மூன்று அமெரிக்கர்கள் பலியான துரதிஷ்ட சம்பவம், ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளில் உள்ள அயர்ச்சி நிலையை காட்டுகிறது. அமெரிக்க தூதுவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க தவறவிட்டுவிட்டார்' என எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரூம்னி தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறார்.

அண்மையில் அல் கைதா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் ஒபாமாவுக்கு இருந்த நற்பெயர், தற்போது லிபிய சம்பவத்தால் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: