சிரிய போரில் காயமடைந்த பொதுமக்களுக்கு வெறு ம் தரையில் படுக்கவைத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் அளவு நிலைமை மோசமடைந் துள்ளது.சிரிய அரச இராணுவ தாக்குதலில் காயம டைந்தவர்கள் அம்புலன்ஸ் வசதி இன்மையால் டிர க் வண்டிகளில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்ப டுகின்றனர். அவர்களில் போதிய சிகிச்சை இடம், வ சதி இன்மையாலும், காயமடைந்தவரின் அவசர தே வை கருதியும் வெறும் தரையில் அவர்களுக்கு சிகி ச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் லண் டன் மெயில் வெளியிட்ட சில புகைப் படங்கள் சில மேற்குலகத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அ லெப்போ வைத்தியசாலையின் சன நெரிசலின்
மத்தியில் நிலத்தில் கிடத்தப் பட்டிருந்த ஒரு சிறுவனின் கவலைக்கிடமான நிலமை ஒரு படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது அவனுக்கு வலது காலில் ஒரு பகுதி நீக்கப்பட்டுப் பின் பன்டேஜ் சுற்றப்பட்டு மேலும் கவனிக்க இயலாதவாறு சுற்றியெங்கும் இரத்தக் கறையுடன் காணப்படுகிறான்.
இச்சிறுவனின் கண்களில் அச்சம் நிறைந்திருப்பதுடன் இவனுக்கு அருகில் பல பொது மக்கள் காயங்களுடன் முறையான வசதிகள் இல்லாமல் அதே அவல நிலையை எதிர் நோக்கியுள்ளனர். மிகவும் தீவிரமான காயங்களுடன் இவனது தந்தையுடன் சேர்த்து இச்சிறுவன் டிரக் வண்டி மூலம் வைத்திய சாலைக்குக் கொண்டு வரப் பட்டிருந்தான்.
இச்சிறுவன் தனது காலை சிரிய இராணுவத்தின் ஆர்ட்டிலரி ஷெல் வீச்சு மூலம் இழந்ததாகக் கூறப்படுகின்றது. இச் சிறுவனைப் போன்று சிரிய யுத்தத்தில் தமது உயிரை இழந்தும் மோசமாகக் காயமடைந்தும் பல பொது மக்கள் இதே அவல நிலையை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் : Ap
0 கருத்துகள்:
கருத்துரையிடுக