தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.12

சிரியாவிற்கு ஆயுதம் ஏற்றவில்லை ரஸ்யா மறுப்பு


கடந்த புதனன்று ரஸ்யாவில் இருந்து வந்த சிரியா வின் எயாபஸ் 320 இரக பயணிகள் விமானத்தை து ருக்கி, வான் பரப்பிலேயே தடுத்து அங்காராவில் ம றித்து வைத்திருப்பது தெரிந்ததே.இந்த விமானத்தில் ஆயுத தளவாடப் பொருட்கள், வெடி மருந்துகள் இரு ப்பதாக துருக்கிய பிரதமர் எர்டோகன் தெரிவித்துள் ளார்.இதற்கு பதிலளித்த ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாரோவ், தாம் இரகசியமான மு றையில் ஆயுதங்களை
அனுப்ப வேண்டிய தேவை எதுவும் கிடையாது என்று ள்ளார்.
சிரியாவுக்கு இரகசியமாக நாம் ஏன் ஆயுதங்களை இரகசியமாக அனுப்ப வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் சிரியாவிற்குள் ஆயுதங்களை அனுப்புவது அங்குள்ள நிலமைகளை தூண்டிவிடும் தப்பான செயல் என்பதை சேர்ஜி லாரோவால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அதேவேளை தமது நாட்டு தனியார் ஆயுத உபகரண ஏற்றுமதியாளரின் ஏற்றுமதிப் பொருட்களே அவை அல்லாது அதற்கும் ரஸ்ய ஆளும் அரசுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றார்.
ஆனால் பயணிகள் விமானத்தில் வெடிமருந்து, ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.. சிரியா மீது ஐ.நாவின் வர்த்தகத் தடை இருக்கும்போது ரஸ்யா தப்பான வழியில் செயற்பட்டுள்ளது என்ற விடயத்தையும் இந்த விவகாரம் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
ஐ.நாவில் சிரியாவுக்கு ஆதரவாக வீட்டோ பாவித்துவிட்டு, ஐ.நா சட்டங்களை மதிக்காது திருட்டுத் தனமாக ஆயுதம் அனுப்பினால் சர்வதேச அமைதி என்ன ஆவது.. இதுதானா ஐ.நா ஐ.நா பாதுகாப்பு சபையின் நேர்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏன் இந்த இரட்டை வேடம்…?

0 கருத்துகள்: