தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.12

பிலிப்பைன்ஸ் அரசு, கிளர்ச்சிக்குழு இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது


பிலிப்பைன்ஸ் நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு இணக்கம் தெரி வித்ததையடுத்து மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் அதனை வரவேற்றுள்ளதுடன் அவரது உதவியுடன் அமைதி ஒப்பதம் கையெழுத்தாகியுள்ளது.அண்மை யில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 40 ஆண்டுகளாக இஸ் லாமிய சுதந்திர முன்னணி (MILF) எனப்படும் கிளர்ச் சிக்குழு தனியாட்சி கோரி போராடி
வந்தது. இதனை யடுத்து புதிய தன்னாட்சி பிராந்தியம் ஒன்றை குறித்த கிளர்ச்சிக்குழுவுக்கென பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வா ழும் இடத்தில் அமைத்துக்கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் அந்நாட்டு பிர தமர் பெனிக்னோ அகுயினோ.  இந்நிலையில் இந்த பிராந்தியம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அமைதி ஒப்பந்தம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா வில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. பிலிப்பை ன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ இஸ்லாமிய சுதந்திர முன்னணி (MILF)அமைப்பின் முராத் இப்ராஹிம் மற்றும் மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசா க் முன்னிலையில் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முன்னதாக மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் சமாதான உடன்படிக்கையினை வரவேற்று அதற்கான தனது ஆதரவையும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பிலிப்பைன்ஸ்க்கு விஜயம் மேற்கொண்ட அவர் அமைதி உடன்படிக்கை கையெழுத்து நிகழ்வில் கலந்து கொண்டார்.



இதனையடுத்து பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியான மிண்டனாவ் மாகாணத்தில் பிலிப்பைன்ஸ் அரசுக்கும், இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுக்கும் இடையே நீடித்து வந்த 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுமார் 120,000 முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி பாங்க்ஸ்மோரோ என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரத்துடன் இனி செயல்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, குறித்த பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்க மறுத்துள்ளது.

0 கருத்துகள்: