தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.12

கேரளாவில் இணைந்த காவியும், செங்கொடியும்!


ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர். எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியு ம் இன்று கேரளாவில் கொஞ்சிக் குலாவுகின்றன. கேரளா, கண்ணூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வி த்தியார்த்தி பரிஷத் (ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபா சிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச் சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து
விட்டு” வந்தார். பதிலுக்கு கண்ணூர் மாவட்டத்திலுள்ள பானூர் என்ற ஊரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ். குலக் கொழுந்துகள்  பார்வையிட்டு “துக்கம் விசாரித்து” வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து RSS இன் பத்திரிகையான “கேசரி”யில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்தக் கட்டுரையை  RSS இன் “அறிவுஜீவிகளின்” பிரிவான பாரதீய விசார கேந்திரத்தின் டி.ஜி. மோகன்தாஸ் எழுதியுள்ளார். 

அதில் கேரளாவில்  ஆர்.எஸ்.எஸ். மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் ஒன்று சேர வேண்டும், “நண்பர்களாக” மாறவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த இருபதாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கொலை மோதல்களில் ஈடுபட்டதில் 150 பேர் வரை அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். “கேசரி”யில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆகா, ஓகோ என்று புகழ்கின்றது. 
ஆர்.எஸ்.எஸ். இல் நாத்திகர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையாளர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை என்று ஆரூடம் சொல்கிறது இந்த கட்டுரை.

0 கருத்துகள்: