ஹாங்காங்கில் உல்லாச பயணம் சென்ற போது படகு கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.ஹாங்காங்கில் தேசிய தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இரவு பிரம்மாண்ட வாண வேடிக்கை நடந்தது. இதை கண்டு களிக்க, ஹாங்காங் எலக்ட்ரிக் கம்பெனி தனது ஊழியர்கள், அவர்களது
குடும்பத்தினரை ஒரு படகில் லம்மா தீவு அருகே அழைத்து சென்றது.
குடும்பத்தினரை ஒரு படகில் லம்மா தீவு அருகே அழைத்து சென்றது.
படகில் 120க்கும் மேற்பட்டோர் இருந்தனர். விக்டோரியா துறைமுக பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது, பயணிகள் படகு மீது எதிர்பாராதவிதமாக கம்பெனி படகு மோதி கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவல் அறிந்து மீட்புப் படையினரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 28 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
7 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மீட்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக