நைஜீரியாவில் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள் ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு ள்ளனர். மூபி நகரில் உள்ள பெடரல் பாலிடெக்னிக் பள் ளியிலேயே இவ்வன்முறை நடைபெற்றுள்ளது.சிலர் துப் பாக்கியால் சுடப்பட்டும், சிலர் கத்தியால் தாக்கியும் கொ ல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, மைதுகுரி நகரி ன் பல்கலைக்கழக
வழாகத்திற்கு எதிரில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட் டதன் தொடர்ச்சியாக இச்சம்பவமும் நடைபெற்றுள்ளது. போகோ ஹராம் கி ளர்ச்சிக்குழு இத்தககுதலின் பின்புலத்தில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படு கிறது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தேர்தல் தொடர்பான சர்ச்சையாலும் இத்தாக்குதல் நடட்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இனந்தெரியாத நபரின் துப்பாக்கிச்சூட்டிலேயே அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பாதுகாவலர்கள், ஒரு முதியோரும் கொல்லப்பட்டவரில் அடங்குவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக