தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

வங்கியில் தாய்ப்பால் வாங்கும் ஆஸ்திரேலிய தாய்மார்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை.


ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தை பெற்ற பெண்களில் பலர், தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்படுகின்றனர்.இதனால் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாமல் போகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இப்படி குழந்தைகளுக்கு

தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண்கள் பலர், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். இதற்காகவே சமூக நெட்வொர்க் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஹியூமன் மில்க் 4 ஹியூமன் பேபிஸ் என்ற என்றழைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்களிடம் தாய்ப்பாலை இலவசமாக பெற்று தேவைப்படும் பெண்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, டாக்டர்கள் தாய்ப்பாலை பரிந்துரைத்துள்ளனர்.
அதற்காக அவருடைய மனைவி தாய்ப்பால் தானம் கேட்டு பெற்றுள்ளார். பெண்களும் தாய்ப்பாலை ஆர்வமுடன் தானம் அளித்து வருகின்றனர். ஆனால், தாய்ப்பால் தானம் பெறுவதால், அதில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் குழந்தைகளுக்கு எச்ஐவி மற்றும் தொற்று நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

0 கருத்துகள்: