தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

சர்ச்சைக்குரிய தீவை தனியாருக்கு விற்க ஜப்பான் அதிரடி திட்டம். சீனா அதிர்ச்சி


சீனாவும், ஜப்பானும் உரிமை கோரும் பிரச்னைக்குரிய தீவில், ஜப்பானிய நில ஆய்வாளர்கள் சென்று அளவிடும் பணியை துவக்கினர்.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா "டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், கடந்த 1890ம் ஆண்டு முதல் இந்த தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.பிரச்னைக்குரிய இந்த தீவில், மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயு அதிகம் கிடைப்பதால் சீனா, இந்த 

பகுதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மாதம் 18ம் தேதி, ஜப்பானிய ஆதரவாளர்கள் 150 பேர், இந்த தீவுக்குச் சென்று ஜப்பானிய கொடிகளை பறக்க விட்டனர். இந்த தீவில், ஜப்பான் சார்பில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தீவில், ஜப்பானிய ஆதரவாளர்கள் சென்று அவர்கள் நாட்டு கொடியை பறக்க விட்டிருப்பதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, இந்த தீவை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் சூசகமாக தெரிவித்திருந்தார். இவரது அறிவிப்பை தொடர்ந்து, ஜப்பானிய நில அளவையாளர்கள், இத்தீவுக்கு நேற்று சென்று அங்குள்ள மரங்கள், நிலத்தின் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: