தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.12

நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்

விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக் கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கி றது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புக ளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உ ருவாக்கி உள்ளனர். ஜப்பானில் உள்ள தேசிய ராணு வ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொ டர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நா னோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில்
கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட் கள் அடங்கியுள்ளன. இவற்றை
உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேத மடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடி யாக தடுக்கப்படும்.

தற்போது விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதித்து உள்ளனர். அதில் மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது. இந்த புதிய மருந்து மூலம் உலகில் பெரிய அளவில் விபத்து மரணங்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஆபரேசன் செய்யும் போதும் இந்த மருந்தை பயன்படுத்தினால் அதிக ரத்தபோக்கை தடுக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: