தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.12

பிரான்ஸ் அல்ப்ஸ் மலைச்சாரலில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி


பிரசித்தமான சுற்றுலாத் தலமான பிரெஞ்சு அல்ப்ஸ் மலைச் சாரலில் உள்ள அன்னெசி ஏரிக்கு அருகில் ம ர்ம நபர் ஒருவர்நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் நேற்று உலகை உலுக்கியுள்ளது.இந்த துயரச் சம்பவ ம் குறித்து விசாரனைகளை மேற்கொள்வதற்காக பி ரெஞ்சு போலிஸ் 60 அதிகாரிகள் கொண்ட குழு ஒன் றை நியமித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் இறந்தவர்கள் பின்வருமாறு
அடையாளங் காணப்பட்டுள்ளனர். சாட் அல் ஹில்லி என அழைக்கப்படும் ஒரு குடும்பஸ்தரும் அவரது மனைவியும் ஒரு வயதான பெண்மணியும் பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட காரினுள் உள் ளே சுடப்பட்டுக் கிடந்தனர்.

இவர்களுக்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டின் சைக்கிள் ஓட்டப் பந்தய வீரர் ஒருவரும் சுடப்பட்டுக் கிடந்தார். கொல்லப் பட்டவர்களில் மூவர் தலையில் சுடப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

எனினும் இச்சம்பவத்தின் போது உயிர் பிழைத்த 4 வயதுச் சிறுமி காயமடைந்த நிலையில் சுமார் 8 மணித்தியாலங்களுக்கு தனது தாயின் பிணத்துக்கு அடியில் மறைந்து காணப் பட்டுள்ளார். இவரை மீட்ட போலிசார் உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இவரைத் தவிர சம்பவ இடத்துக்கு அருகில் 7 வயதுடைய இன்னொரு சிறுமியும் கையில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

0 கருத்துகள்: