அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா உத்தியோகபூர்வமா ன வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.டெமக்கிரட்டி கட்சி யின் சலோற்றா நோர்த் கரோலினாவில் இடம் பெற்ற பிரமாண் டமான கூட்டத்தில் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப் பு செய்யப்பட்டது.அத்தருணம் அவரைப் பாராட்டி முன்னாள் அ மெரிக்க அதிபர் பில் கிளின்டன் 48 நிமிட நேரம் நீண்ட உரையை ஆற்றினார்.பராக் ஒபாமாவை அடுத்த அதிபர் வேட்பாளராக அ றிமுகப்படுத்துவதில் தான் பெருமையடைவதாகவும் அவர் தெ ரிவித்தார்.ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குள் போகவிடாது காப்பா ற்றியவர் பராக் ஒபாமா
என்று புகழுரை பகர்ந்தார்.எதிரணியில் உள்ள றிப்பப்ளிக்கன் அதிபர்கள் செய்யாத சாதனையை தனது நான்காண்டுகால பருவத்தில் அவர் செய்துள்ளார், அவரை மேலும் நான்கு ஆண்டுகள் வாய்ப்பளித்து வெள்ளை மாளிகை அனுப்ப வேண்டுமென்றும் கிளின்டன் கோரினார்.
அதேவேளை இன்று வெளியான அமெரிக்க உணவுத்திணைக்கள புள்ளிவிபரம் ஒபாமாவின் ஆட்சி கிளின்டன் சொன்னது போல பாலும் தேனும் கரைபுரண்டோடிய ஆட்சியல்ல என்பதை உணர்த்துகிறது.
தற்போது அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் பட்டினியான வயிற்றுடன் படுக்கையில் கிடக்கிறார்கள், இவர்களில் எட்டு இலட்சம் பேர் 2010ம் ஆண்டுக்கு பின்னர் பட்டினிப் பட்டியலில் சேர்ந்துள்ளார்கள்.
வேலையின்மை, குறைந்த வருமானம் காரணமாக இவர்கள் அரசின் கரங்களை எதிர்பார்த்து காத்துள்ளார்கள், இவர்களைக் காப்பாற்ற ஒபாமாவால் முடியவில்லை.
ஆனால்… அடுத்த தடவையும் ஒபாமா அதிபராக வரவேண்டும் என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.
காரணம், தற்போது உலகில் உள்ள பொருளாதார மந்தத்தைத் தீர்ப்பதற்கான உலகளாவிய பணிகளை ஒபாமா முன்னெடுத்துள்ளார், அவருடைய முகம் உலக மக்களுக்கு பரிச்சயமாகிவிட்டது, இன்னொருவரை பரிச்சயமாக்கு முன்னர் ஏற்கெனவே இருப்பவரை பயன்படுத்துவது நல்லதென்று தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அதிபராக இருக்க இயலாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக