தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.12

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


உடனடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.கடந்த 19ம் திகதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடியது. தமிழகம், புதுவை, கேரளா, கர் நாடகா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் கல ந்து கொண்டனர். அப்போது காவிரி நதிநீர் ஆணைய க் கூட்டத் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ கத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும்
என்று கோரிக்கை விடுத்தார்.

    ஆனால், அப்படி தண்ணீர் திறந்து விடமுடியாது. கர்நாடகாவிலும் கடும் வரட்சி தொடர்வதாக கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், இன்று காவிரி நதி நீர் தொடர்பான  மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பிரதமர் மன்மோகன் சிங் ஆணைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தனர்.

அத்துடன், எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதி வரை தமிழகத்துக்கு காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்பின்படி தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்றும் கர்நாடக் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், 24 நாட்களுக்கு 2 டிஎம்சி தண்ணீர் தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் என்கிற தமிழக அரசின் மனுவை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்றும் அதன் பின்னர் தமிழகத்துக்கு 2 டிஎம்சி தண்ணீர் விடுவது குறித்து முடிவுகள் தெரியும் என்று தெரிகிறது. 

0 கருத்துகள்: