அமெரிக்காவின் எதிரி அசாஞ்ச் என, அந்நாட்டு ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். தற்போது, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.ஈக்வடார் தூதரகத்தில் இருந்த படி, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அவர் நேற்று, ஐ.நா., சபையில் கூடியிருந்த பல் வேறு நாட்டுத் தூதர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்கா அதிபர் ஒபாமாவைக் கடுமையாக விமர்சனம்
செய்தார்.அமெரிக்க ராணுவம், அசாஞ்ச்சை எதிரியாக அறிவித்துள்ளதாக, ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது."தலிபான்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளை எதிரியாகக் கருதும் அமெரிக்கா, இவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை அளிக்கும். இந்தப் பட்டியலில் தான் அசாஞ்சையும் வைத்திருக்கிறது' என, இந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக