பீஹார் மாநிலத்தவர்களை அவதூறாகப் பேசியதாக, பால்தாக்கரே மீது போடப்பட்ட வழக்கில் பால்தாக்க ரே ஆஜராகாததால், அவருக்கு டெல்லி பெருநகர் நீதி மன்றம், ஜாமீனில் வெளிவராத பிடிவாரன்ட் பிறப்பி த்து உள்ளது.பீகார் மாநிலத்தவர்கள் டெல்லியில் ஊ டுறுவக்கூடாது. அவர்கள் உடனே மராட்டியத்தை வி ட்டு வெளியேற வேண்டும் என்று, மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசியிருந்தா ர். இதை எதிர்த்து, பிரேம் குமார், சுதீஷ் குமார் ஆகிய இரு வழக்கறிஞர்கள்
டெல்லி பெருநகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தனர்.அந்த மனுவில், நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசியிருப்பது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊரு விளைவிக்கும் விதமாக உள்ளது என்று மனுத் தாக்கல் செய்திருந்த இரு வழக்கறிஞர்களும் குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக ராஜ் தாக்கரே மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்மன் அனுப்பியும் ராஜ் தாக்கரே நீதி மன்றத்தில் ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவராதபடி பால்தாக்கரேவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளனர் என்று தெரிகிறது. வராவிட்டால் இழுத்து வரவும் ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக