சமீப காலமாக பல்வேறு சர்ச்சைக்குள்ளாகும் குஜராத் மாநிலத்தில் இருந்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாய் குஜராத்தில் வாழும் சீக்கியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தால் கதி கலங்கி நிற்கின்றனர்.1965ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தான் எல்லையோரம் தைரியமான இந்தியர்கள் இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது என்பதால் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஆலோசனையின் பேரில் ஏராளமான சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வெளியேறி
குஜராத்தின் கட்ச் பகுதியில் குடியேறினர்.சமீப காலமாக மோடி அரசில் சீக்கியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 1958ல் இயற்றப்பட்ட பம்பாய் விவசாய மற்றும் குடியேற்ற சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள சீக்கியர்கள் தங்கள் நிலத்தை விற்கவோ, பிற நிலத்தை வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20,000 ஏக்கர் நிலங்கள் இத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவிக்கும் குஜராத் சீக்கியர்கள், "பொட்டல் காடாக இருந்த கட்ச் பகுதியை எங்கள் கடும் உழைப்பால் இன்று செழிப்பாக மாற்றியுள்ள நிலையில் தற்போதுஏங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வேதனை அளிக்கிறது" என வேதனையுடன் கூறுகின்றனர். ஐம்பது வருடங்களுக்கு முன் குஜராத்தில் குடியேறிய தங்களை வெளியேற சொன்னால் எங்கு செல்வது என கேள்வியெழுப்பும் சீக்கியர்கள் மஹாராஷ்டிராவில் பீஹாரிகள் நடத்தப்படுவதை போல் தாங்கள் குஜராத்தில் நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சீக்கியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கப்பட்ட போதும் அதை எதிர்த்து மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறும் சீக்கியர்கள் அவ்வளவு பணம் கொடுத்து வாதாட தங்களுக்கு சக்தியில்லை என்றும் கூறுகின்றனர். "இது குறித்து நரேந்திர மோடியுடனும் பிஜேபி தலைமையுடனும் பேசப்படும்" என சிரோன்மணி அகாலி தள கட்சி அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக