அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒபாமா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இனவெறிக் கருத்துகளை தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த செய்திகளில், பில் கிளின்டன், ஒபாமாவைப் பார்த்து, "இவர், சில ஆண்டுகளுக்கு முன், நமக்கு காபி கொடுத்தார் என்றும், நமது பைகளை சுமந்துச் சென்றார்' என்றும், கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னும், பல நேரங்களில், "ஒபாமாவை தகுதியற்றவர்; திறமையற்றவர்; இந்த உலகம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாது' என்றும், பில் கிளின்டன் கூறியதாக, "சன்டேஸ் போஸ்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக