தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.12

முபாரக் ஆட்சிகால சொத்துக்களை முடக்க பிரிட்டன் தவறுகிறது'


எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியிலிருந்தபோது, அவரது அதிகார வட்டாரத்துக்குள் இருந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தவறிவருவதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.முபாரக் ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்த பெரும்புள்ளிகள் பலருடன் தொடர்புள்ள சொத்துக்களும் நிறுவனங்களும் எந்தவிதமான தடைகளும்

இன்றி இயங்குவதாக பொதுமக்களுக்கு இலகுவாக கிடைக்கக்கூடிய ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முபாரக் ஆட்சியாளர்களால் திருடப்பட்ட செல்வங்களை மறைத்துவைப்பதாகவும் ஊழல்மோசடிகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகளை மீறுவதாகவும் பிரிட்டன் மீது எகிப்து அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், அவ்வாறான சொத்துக்களை தேடியறிவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக பிரிட்டிஷ் அரசு கூறுகிறது.
முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்கும் அவரது ஆட்சி பீடத்தில் செல்வாக்கு செலுத்தியவர்களும் பல்லாயிரம் கோடி டாலர்கள் கணக்கான செல்வத்தை கொள்ளையடித்துள்ளதாக குற்றஞ்சாட்டுக்கள் வெளியானதை அடுத்து அவருக்கு எதிராக பெரும் மக்கள் புரட்சி வெடித்தது.
அதன்பலனாக, கடந்த ஆண்டு பெப்ரவரி 11-ம் திகதி முபாரக் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
அதற்கு மூன்று தினங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக், முன்னாள் ஆட்சியாளர்கள் பலரது சொத்துக்களை முடக்குமாறு எகிப்து அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அதனையடுத்து பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் முன்னாள் ஆட்சியாளர்களின் சொத்துக்களுக்கு எதிராக தடைகளை அறிவித்திருந்தன.
முபாரக், அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு மகன்மாருக்குச் சொந்தமான சுமார் 135 மில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்கள் இப்போது பிரிட்டனில் முடக்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: