தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.9.12

அமெரிக்காவின் பிரச்சனைகளை நான் அதிபர் பொறுப்பு ஏற்றிருந்தாலும் சரி செய்திருக்க முடியாது. பில் கிளிண்டன்


அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினர் ஏற்படுத்திய குளறுபடிகளை, முழுமையாகச் சரி செய்ய, இன்னும் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். எனவே, ஒபாமாவை மீண்டும் அதிபராக்க வேண்டும்' என, முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 6ம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக, மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், ஒபாமா மீண்டும் களமிறங்குகிறார் ஒபாமாவை, அதிபர்

வேட்பாளராக, அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்ய, வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் நகரில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு நடந்தது. ஒபாமாவை மீண்டும் வேட்பாளராக்க, மாநாட்டில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, ஒபாமாவை முன்மொழிந்து, முன்னாள் அதிபர் பில் கிளின்டன் பேசியதாவது: வெளித் தோற்றத்துக்கு குளிர்ச்சியாகவும், உள்ளுக்குள், அமெரிக்காவுக்காக பற்றி எரியும் மன ஓட்டமும் கொண்ட ஒருவர் தான், அமெரிக்காவின் அடுத்த அதிபராக வேண்டும். புதுமை, படைப்புத் திறன், கல்வி மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய, புதிய அமெரிக்க கனவு பொருளாதாரத்தை கட்டமைக்க தகுதி படைத்தவரே, அதிபர் பதவியில் அமர வேண்டும்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஒபாமாவே வர வேண்டும் என, விரும்புகிறேன். ஒபாமா அதிபராக பதவியேற்ற போது, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலை போன்றவை, மிக மோசமாக இருந்தன. அந்த தருணத்தில், நான் அதிபராக பொறுப்பேற்றிருந்தாலும், வேறு யார் வந்தாலும், உடனடியாக எந்த தீர்வையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.அந்த வகையில், அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஒபாமாவே வர வேண்டும் என, விரும்புகிறேன். ஒபாமா அதிபராக பதவியேற்ற போது, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலை போன்றவை, மிக மோசமாக இருந்தன. அந்த தருணத்தில், நான் அதிபராக பொறுப்பேற்றிருந்தாலும், வேறு யார் வந்தாலும், உடனடியாக எந்த தீர்வையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.

நலிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான, அத்தனை நடவடிக்கைகளையும், ஒபாமா, மிகச் சரியாக மேற்கொண்டார். கடந்த ஆட்சியில், குடியரசுக் கட்சியினர் செய்து வைத்திருந்த குளறுபடிகளையும், சேதாரங்களையும் சரி செய்ய, இன்னும் நான்கு ஆண்டுகள் தேவைப்படும். எனவே, மீண்டும் ஒபாமாவை அதிபராக்கினால், அதற்கான பலனை, மக்கள் நன்கு உணருவர். இவ்வாறு, பில் கிளின்டன் பேசினார்.

0 கருத்துகள்: