அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் ப திவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபே ட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணைய தளத்தில் வெளியிட் டுள்ளது. ஆனால், விவரங்கள் திருட ப்படவில்லை என்று எப்.பி.ஐ. கதறுகிறது. அமெரிக்காவி ல் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவ ர்களுக்கு, அதிர்ச்சி தரும்
செய்தி காத்திருந்தது. ஹாக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டரில் வைரசை பரப்பி இணையதளங்களை முடக்குவது, தகவல்களை திருடுவது போன்ற வேலைகளை செய்யும் ‘ஆன்டிசெக்’ என்ற குழு, விஷமம் பண்ணியிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு கோடி 23 லட்சத்து 67,232 ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களின் யூடிஐடி (யூனிக் டிவைஸ் ஐடென்டிபையர்ஸ்), அவற்றின் உரிமையாளர் பெயர், கருவியின் பெயர், அது எந்த வகையைச் சேர்ந்தது, ஆப்பிள் புஷ் நோட்டிபிகேசன் டோக்கன்ஸ், ஜிப் கோடு, செல்போன் எண்கள், முகவரிகள் என சகலவித விவரங்களையும் திருடி இணையதளத்தில் வெளியிட்டு ள்ளது.
ஐபோன் மற்றும் ஐபேட் வைத்துள்ளவர்கள் அவசர, அவசரமாக தங்களுடைய விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்று இணையதளத்தில் சரிபார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஏனெனில், கனகச்சிதமாக அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருந்தன. ஐபோனில் வாடிக்கையாளர்கள் என்னென்ன விவரங்களை பார்க்கிறார்கள், எவற்றை சேகரித்து வைத்துள்ளார்கள் போன்ற பல விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்ததால், பலரும் கவலை அடைந்தனர்.
இதனால் உடனடியாக இந்தச் செய்தி காட்டுத்தீ போல பலருக்கும் பரவியது. இதுதொடர்பாக, எப்.பி.ஐ.யில் பணியாற்றும் சிறப்பு கண்காணிப்பு ஏஜென்ட் கிறிஸ்டோபர் கே ஸ்டாங்கி என்பவரின் டெல் லேப்டாப்பில் இருந்துதான் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால், எப்.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் இருந்து 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபேட் விவரங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானதாகும். அப்படி எந்த திருட்டும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை திருடி வெளியிட்டுள்ள ஆன்டிசெக் தன்னுடைய தகவலில் தெரிவித்துள்ள ஹைலைட் விஷயம், ‘நாங்களாவது சும்மா திருடி தகவல்களை வெளியிட்டோம்.
ஆனால், ஆப்பிள் கருவி வாடிக்கையாளர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் தகவல்களை எப்.பி.ஐ. திரட்டி வைத்துள்ளது’ என்று கொளுத்தி போட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக