தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.9.12

காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடக் கோரியிருந்த தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை


காவிரி நதிநீர் ஆணையம் கூடும் வரை சம்பா பயிர் கருகுவதை தடுக்க, தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திற ந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை யிட வேண்டும் என்று தமிழக அரசு தொடுத்திருந்த மனுவின் மீதான விசாரணை நேற்று மாலை நடந்த து.உச்சநீதி மன்ற நீதிபதிகள் டி கே ஜெயின், மதன் லாகூர் முன்னிலையில் நடந்த இவ்விசாரணையின் போது, தமிழக அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஏற்கனவே குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டநிலையி ல் காவிரி டெல்டா மாவட்ட
விவசாயிகள் தற்போது சம்பா பயிரிட்டு தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் சம்பா பயிர் கருகும் நிலையில் உள்ளது.

     எப்போதும் ஜூன் 12 இல் காவிரி தண்ணீ பெருகி மேட்டூர் அணை திறந்து விடப்படும். இப்போது செப்டெம்பர் ஆகியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்வரும் 19 ம திகதி காவிரி நதி நீர் ஆணையம் கூடி முடிவெடுக்கும் வரை தமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக தினமும் 2 டி எம் சி தண்ணீர் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
 அப்போது நீதிபதி எதிர்தரப்பு வாதத்தைக் கேட்டனர். கர்நாடக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டால்கூட கர்நாடக விவசாயிகளின் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப் படுகிறது. இப்போதே 42 தாலுகாக்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. இவைகளை கர்நாடக அரசு வறட்சி மாவட்டமாக  அறிவித்திருக்குறது என்றார்.

    அப்படியானால் இதுவரை தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேட்டபோது, சரியாக பதில் சொல்லாத கர்நாடக அரசு வழக்கறிஞர், இப்போது தினமும் 0.6 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூற நீதிபதிகள் இதுவரை தமிழகத்திற்கு திறந்து விட்ட  நீர் எவ்வளவு  என்று  விரிவான அறிக்கையை  வரும் திங்கட் கிழமை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர். தமிழக அரசின் மனுவின் மீதான விசாரணை திங்கட் கிழமை இருக்கும் என்று தெரிகிறது.

0 கருத்துகள்: