தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.12

முஸ்லீம் மதகுரு செய்திக்கு பிரிட்டிஷ் மகாராணியிடம் பிபிசி மன்னிப்பு.


போராளிகளின் முஸ்லீம் மதகுரு அபு ஹம்சா குறித்து பிரிட்டிஷ் மகாராணி கவலைகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை வெளியிட்டதற்காக பிபிசி மகாராணியிடம் மன்னிப்புகேட்டுக்கொண்டுள்ளது.முன்னதாக, போ ராளிகளின் இஸ்லாமிய மத குரு, அபு ஹம்சா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக 2006ல் கைது செய்யப்பட்டு, சிறைத்
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பே, அவரைப் பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் கவலைகளை வெளியிட்டார் என்று பிபிசி செய்தியை வெளியிட்டது .
அவரைக் கைது செய்வதற்கு வழிகளே இல்லை என்று தோன்றுவது குறித்து தான் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக மகாராணி தன்னிடம் கூறினார் என்று பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த செய்தியாளர் பிராங்க் கார்ட்னர், பிபிசியின் ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்த செய்தியை, மகாராணி தன்னிடம் ஒரு தனிப்பட்ட முறையில் உரையாடியபோது தெரிவித்ததாக கார்டனர் இந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
 மகாராணி பிரிட்டிஷ் உள்துறை அமைச்சரிடமும் இது குறித்து நேரடியாகவே பேசியதாகத் தெரிவிக்கும் பிபிசி செய்தியாளர், ஆனால் பிரிட்டிஷ் மகாராணி, அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த முயலவில்லை, மாறாக, இந்தப் பிரச்சினை குறித்து பரவலாக இருந்த கவலைகளையே வெளிப்படுத்தினார் என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது, பிபிசி மகாராணியின் அலுவலகத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கார்டனருக்கும் மகாராணிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் தனிப்பட்ட உரையாடலாகவே இருந்திருக்கவேண்டும் , அதை ஒலிபரப்பியது பொருத்தமற்றது என்றும், இதற்காக பிபிசியுன், கார்டனரும் வருத்தம் தெரிவிக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து பிரிட்டிஷ் மகாராணியோ அல்லது உள்துறை அமைச்சகமோ கருத்து எதையும் வெளியிடவில்லை.
மகாராணி எலிசபத் பொதுவாக அரசியல் மற்றும் அரசியல் சட்ட விஷயங்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவிப்பதில்லை.
அபு ஹம்சா பிரிட்டனிலிருந்து அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தி ஒப்புவிக்கப்படுவதற்கு எதிராக அவர் தொடுத்திருந்த இறுதிக்கட்ட மேல் முறையீடுகளை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்த பிறகு அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் இந்தக் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன.

0 கருத்துகள்: