தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.12

சுப்ரிம் கோர்ட்:முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது


முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது – காவல் துறை யை கடுமையாக விலாசிய சுப்ரிம் கோர்ட்.!!!சிறுபா ன்மை இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சித்தரித்து சி றையில் அடைக்கக் கூடாது என சுப்ரிம் கோர்ட் குஜாரத் காவல்துறையை கடுமையாக சாடி நேற்று உத்தரவிட்டுள்ளது,1994 ல் அஹ்மதாபாத் ல்
நடை பெற்ற Jagannath Puri Yatraவில் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டதாக அஷ்ரஃப் கான் மற்றும் 10 நபர்கள் தீவிரவாத தடுப்பு (தடா) சட்டத்தில் குஜராத் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்,

பாதிக்கப்பட்டவர்கள் இந்த தடா உத்தரவை எதிர்த்து சுப்ரிம் கோர்ட்டில் முறையிட்டார்கள்,

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் H.L. Dattu C.K. Prasad , ”மாவட்ட Superintendent of Police , ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வன்னம் எதையும் செய்யக் கூடாது. மேலும் ”என் பெயர் கான் என்பதால் நான் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுகின்றேன் ஆனால் நான் தீவிரவாதி இல்லை, ” என யாரும் நினைத்து பாதிப்பு அடையும் வன்னம் காவல் துறை நடந்து கொள்ள கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்,

மேலும் நீதிபதிகள், விதிமுறைகளை பின் பற்றாமல் தடா சட்டத்தை பயன்படுத்துவது குற்றமாகும். இந்த வழக்கில் , கான் மற்றும் 10 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். SP யிடம் முன் அனுமதி பெராமலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தடா சட்டத்தில் கைது செய்ய SP யிடம் முன் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்கள்.

0 கருத்துகள்: