இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபி அ வர்களை அவமானப்படுத்தும் விதமாக எடுக்கப்பட் ட அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக கொல்கத்தா வில் இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தி ரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்குள்ள அமெ ரிக்க மையம் மூடப்பட்டுள்ளது.வங்கதேச சிறுபான் மை இன இளைஞர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெ
டுத்திருந்தன. மத்திய கொல்கத்தாவின் சாவ்ரிங் கேவில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், குறித்த திரைப்படத்திற்கு எ திராக அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.எனினும் குறித்த இடத்திற்கு சிறிது தூரத்திலேயே அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர மையத்திலிருந்து அமெரிக்க மைய நூலகத்தை நோக்கி அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர்.
எகிப்து, லிபியா, யேமன், துனிசியா, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களை போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகமும் ஒருவாரகாலமாக முற்றுகையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக