தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.9.12

நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்ப்டம் பாகிஸ்தான் மந்திரிக்கு அமெரிக்கா கண்டனம்


தி இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்ப டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த  கிருஸ்துவ பாதிரி யார் தயாரிப்பாளர் தயாரித்து வெளியிட்டார். இந்த படம் நபிகள் நாயகத்தை அவமதித்து வெளியிடப்பட் டுள்ளதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள முஸ் லிம்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத் தி வருகின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ரெயில் வே மந்திரி குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்திகளையும் ஏற்றுக்கொ ள்ள முடியாது என்று கூறி, அமெரிக்க திரைப்பட த யாரிப்பாளரை கொல்பவ
ர்களுக்கு ரூபாய் 55 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதை அமெரிக்கா கண்டித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறத் துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
தலைவர்கள் பொறுப்புடன் இருந்து வன்முறைக்கு எதிராக பேசுவது, நடந்துகொள்ளவது மிக முக்கியம். வன்முறையை தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் அவர் பேசியிருப்பதில் எந்த வித நியாயமும் இல்லை.
அமெரிக்காவிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், வன்முறை மற்றும் அவமதிப்பு போன்றவை குறித்த வீடியோ காட்சிகளை அதிபர் ஒபாமா மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பார்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே மந்திரி இவ்வாறு பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து என்றும், பாகிஸ்தானின் அரசியல் சட்டம் பற்றி அவர் பேசவில்லை என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது

0 கருத்துகள்: