இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் அமெரி க்காவில் வெளியிடப்பட் ட திரைப்படத்தை கண்டித் து இன்று இரண்டாவது நாளாக இலங்கையில் உள் ள அமெரிக்க தூதரகமும் முற்றுகைக்கு உள்ளான து.அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை தாங்கி யவாறு சுமார் 20,000 பேர் இந்த ஆர்ப்பாட்ட பேரணி யில் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள அமெரிக் க தூதரகத்தை முற்றுகையிட்டனர். மறுமுனையில் உலக கோப்பை T20 போட்டிகள் நடைபெற்றுகொண்
டிருப்பதால் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் பதற்றம் தொடர் ந்தது. 'அன்பான இஸ்லாமியர்களே! கொகோ கோலா, கே.எஃப்.சி, மெக்டான ல்ட், பெப்சி, ஃபண்டா, பிசா ஹட், யூ டியூப், D மற்றும் G என யூதர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை நிறுத்துங்கள்.' போன்ற பதாகைகளும், 'இத் திரைப்படத்திற்கு பின்னணியில் இருப்பது யூதர்களே' எனும் வேறு சில பதாகைகளும் ஆர்ப்பாட்டகாரர்களினால் காண்பிக்கப்பட்டது.

வீடு, கட்டிட நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க உற்பத்திகள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். கூகுள் தேடுபொறியை கூட பயன்படுத்த கூடாது என்றார்.
குறித்த போராட்டத்தை அடுத்து கொழும்பில் வாகனநெரிசல் அதிகமாக காணப்பட்டுள்ளது. உலக கோப்பை T20 போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருவதால் அமெரிக்க தூதரகத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டல்களிலேயே பல வீரர்கள் தங்கியுள்ளனர். ஜனாதிபதி வாசஸ்தலமும் அருகிலேயே இருக்கிறது. இதனால் ஆர்ப்பாட்டம் அத்துமீறிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 8000 ற்கு அதிகமானவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொழும்பு - காலி வீதியில் போக்குவரத்து பலமாக ஸ்தம்பிதமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பதற்றநிலையை கருத்தில்கொண்டு அமெரிக்க தூதரகம் இன்று மூடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக