தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.9.12

ஆஸ்காரை புறக்கணிக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் அதிகரிப்பு


2013 இன் ஆஸ்கார் விழாவைப் புறக்கணிக்குமாறு ஈரான் திரைப்பட துறைக்கு பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  ஈரான் அரசால் கட்டுப்படுத்தப் படும் சினிமா ஏஜன்ஸியின் தலைவ ரான ஜவாட் ஷமக்தரி ஊடகங்களுக்குப் பேட்டியளி க்கையில்தமது நாடு 2013 ஆண்டு இடம்பெறவுள்ள திரைப் படங்களுக்கான அதியுயர் விருது வழங்கும் வைபவமான ஆஸ்கார் விழாவை நிச்சயம் புறக்க ணிக்க வேண்டும். அமெரிக்காவில் வெளியான
முஹம்மது நபியை அவமதிக்கும் காட்சிகள் கொண்ட திரைப்படம் இணையத் தளம் மூலமாக பிரசித்தமாகி முஸ்லிம் மக்களின் உள்ளத்தை நோகடித்துள் ளது.

இக்காரணத்தால் எதிர்வரும் ஆஸ்கார் விழாவைப் புறக்கணிப்பது மட்டுமல்லாமல் அவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ள வெளிநாட்டுப் படங்களின் பட்டியலிலும் எந்த ஒரு ஈரானிய போட்டியாளரும் இடம்பெறக் கூடாது. ஈரான் ஹாலிவுட்டின் மிக முக்கியமான இந்த விழாவை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் தனது சுய மரியாதையைப் பேணிக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதே போன்று ஈரானின் பல்வேறு ஆன்மீக தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.  இந்த சினிமா ஏஜன்ஸியைச் சேர்ந்த ஒரு குழு ஏற்கனவே அந்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'Ye Habbeh Ghand' எனும் (A Cube of Sugar) எனும் திரைப்படத்தை ஆஸ்கார் விழாவுக்கு அனுப்பத் தெரிவு செய்துள்ள நிலையில் இவ்விவகார சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் நிகழ்ந்த 2012 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் வைபவத்தில் ஈரானிய இயக்குனர் அஷ்கர் ஃபர்ஹடி இயக்கிய 'A Separation' எனும் திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதைச் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: