தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.9.12

பிரான்ஸ்:முகத்திரையை விலக்க மறுத்த முஸ்லீம் பெண்ணுக்கு இரண்டு மாத சிறை

பிரான்சில், முகத்திரையை அகற்றச் சொன்ன, பெண் போலீசைக் கடித்த, முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.பிரான்சில், மெர்செல் நகரைச் சேற்ர்ந்தவர், லூயி மேரி சூசி, 18. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம், கறுப்பு அங்கியால், உடல் முழுவதையும் மறைத்தப டி, மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்ப டி, உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது இடத்தி ல் செல்வது குற்றம்.கோபம்:
எனவே, இரண்டு பெண் போலீசார், லூயியை வழிமறித்து, அவரது அடையா ள அட்டை மற்றும் ஆவண
ங்களைக் காட்டும்படி கூறினர்; முகத்திரையையும் அகற்றும்படி உத்தரவிட்டனர். அவர்கள் சொன்னதை கேட்காமல், லூயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற லூயி, பெண் போலீஸ் ஒருவர் மீது பாய்ந்து, திடீரென கடித்து விட்டார்.


தண்டனை: இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, போலீசை கடித்ததை, ஒப்புக் கொண்டார் லூயி. இதையடுத்து, அவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். பிரான்சில், "முகத்தையும், உடலையும் மூடிக் கொண்டு, பொது இடத்திற்கு வருவது குற்றம்' என, 2011ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மீறினால், இந்திய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து, வழக்கில் சிக்குவோர், கட்டாயப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு, பிரான்ஸ் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சட்டம் தொடர்ந்து அமலில் உள்ளது.

0 கருத்துகள்: