தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.9.12

முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒபாமா கருத்து

லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்கத் தூ தரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய் தா அமைப்புக்குத்தொடர்புள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபா மா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மியாமி நகரி ல் உள்ள டவுன் ஹாலில் ஒபாமா வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக் கத் தூதரகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற் றும் வன்முறையின் பின்னணியில் ஈரான் அல்லது
அல்-காய்தாவின் சதி இருக்குமா? என்று செய்தியா ளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து ஒபாமா கூ றியதாவது:பெங்காசி தாக்
குதலில் அல்-காய்தா அமைப்புக்குத் தொடர்புள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. இத்தாக்குதல் குறித்து நாங்கள் விசாரணை நடத்தப் போகிறோம். வெவ்வேறு நாடுகளில் மாறுபட்ட சூழ்நிலைகள் இருக் கும். எனவே உரிய தகவல் திரட்டப்படும் வரை நான் எதையும் பேச விரும்ப வில்லை. எங்களுக்குத் தெரிந்த வரை, அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மீது தாக்குதல் நடத்த, சம்பந்தப்பட்ட விடியோவை பயங்கரவாதிகள் ஒரு சாக் காகப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்கத் தூதரகங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்த விவகாரத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பது யார் என்பதைக் கண்டுபிடிக்கும்படியும் நாங்கள் எகிப்து, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளை வலியுறுத்தினோம். அவற்றிடம் இருந்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. 

அமெரிக்கத் தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கான பாதுகாப்புக்கு நான் உயர் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். கெய்ரோவில் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய உடனேயே, அமைச்சர் ஹிலாரியுடன் இணைந்து பல்வேறு நாட்டுத் தூதரகங்களுக்கான பாதுகாப்பை இரட்டிப்பாக்க முயற்சி மேற்கொண்டோம். சம்பந்தப்பட்ட விடியோவானது அமெரிக்காவின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. மற்றவர்களின் மத நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், வன்முறையைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று ஒபாமா தெரிவித்தார்.

விசாரணைக் குழு அமைப்பு: இதனிடையே, பெங்காசியில் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட 4 பேர் கொல்லப்பட்ட தூதரகத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமெரிக்க அரசு அமைத்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வியாழக்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

0 கருத்துகள்: