சந்திரனில் நாட்டப்பட்ட அமெரிக்க கொடி இன்னும் பறந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.கடந்த 1969ம் ஆண்டு அமெரிக்காவின் "அப்போலோ- 11 விண்கலம் சந்திரனை சென்றடைந் த போது, நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான விண் வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க கொடிகளை நட்டு வைத்தனர்.புவிவட்டபாதையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வு கேமரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள படத்தில், சந்திரனில் நடப்பட்ட கொடி
இன்னும் பறந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக சந்திரனை பற்றிய ஆய்வு திட்ட விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
இன்னும் பறந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக சந்திரனை பற்றிய ஆய்வு திட்ட விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
அப்போலோ விண்கலம் நிலவிலிருந்து புறப்படும் போது, விண்கலத்தின் இன்ஜின் வெளியிட்ட வெப்பத்தால் கொடிகள் எரிந்து போயிருக்கும் என, சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். சந்திரனில் 250 முதல் 280 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை காணப்படுகிறது. இந்த வெப்பத்தில் அமெரிக்க கொடி 40 ஆண்டுகளாக பறந்து கொண்டிருக்குமா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பியுள்ளனர். ஆனால், நாசா விண்வெளி ஆய்வு கேமரா எடுத்துள்ள படம், நிலவில் நடப்பட்ட ஆறு கொடிகளில் ஒரு அமெரிக்க கொடி மட்டும் இன்னும் பறந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக மார்க் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக