அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரைய ரங்கில் படுகொலை புரிந்த சந்தேக நபர் ஜேம்ஸ் கொலம் மீது 142 குற்றங்களை போலீசார் சுமத்தியுள் ளனர்.12 பேரை கொலை செய்தது, 58 பேரைகொல்ல முயன்று படுகாயப்படுத்தியது, திரைப்பட அரங்கினு ள் இரண்டு நச்சுப் புகை குண்டுகளை வீசியது, மே ல்நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலவரமூ ட்டியது, ஒட்டுமொத்த பார்வையாளரையும் சுட்டு வீழ்த்த முயன்றது, சகட்டுமேனிக்கு துப்பாக்கி பிர யோகம் செய்தது, அதற்கான பல மாதங்கள் திட்டமிட்டது,
கொலைகளை செய்த பின் எதுவும் தெரியாதென பேய்க்குஞ்சு நாடகமாடியது போன்ற 142 குற்றச் செயல்கள் இவர் மீது பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் மரண தண்டனை இன்னமும் அமலில் இருப்பதால் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் இவருக்கு உச்சகட்ட தண்டனையை பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.
அதேவேளை இதுபோல படுகொலைகளை செய்த நோஸ்க் கொலையாளி ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் ஒரு கட்டத்தில் விடுதலையாவார் என்ற எண்ணம் சில நோஸ்க்காரரிடையே வளர்க்கப்பட்டு வருகிறது.
அப்படியான எண்ணங்களை வளர்க்க வேண்டாம் உயிருள்ளவரை ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் என்ற மனநோய் கொலைஞன் சிறையை விட்டு என்றுமே வெளிவர முடியாது என்று இன்றைய நோஸ்க் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற மனநோய்க் கொலைகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாதவை என்ற முடிவை அமெரிக்கா இறுக்கமாக எடுத்துள்ளதால் நோர்வே அரசுக்கும் கடுமையாக நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒப்பீட்டுரீதியாக ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக