மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் அசாம் வன்முறைக்கு கண்டனம் தெரிவி க்கும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத ற்காக ரசா அகாடமி தலைமையலின பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோ ர், ஆசாத் மைதானத்தில் திரண்டனர். கறுப்பு பேட் ஜ் அணிந்து வந்த போராட்டக்காரர்கள், வன்மு றைக்கு எதிரான கோ
ஷங்களை எழுப்பினர். நேரம் செல்லச் செல்ல இப் போராட்டம் கலவரமாக மாறியது. வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பத்திரிகையாளர்களின் கேமராக்களும் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷங்களை எழுப்பினர். நேரம் செல்லச் செல்ல இப் போராட்டம் கலவரமாக மாறியது. வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பத்திரிகையாளர்களின் கேமராக்களும் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் மும்பையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதாகவும், பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரசா அகாடமி தலைவர் சயீத் நூரி தெரிவித்தார்.
இதுபற்றி மியான்மர் அரசு, ஐ.நா. சபை, இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச மனித உரிமை கழகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக