உலக அதிசயங்களில் ஒன்றாக சீனபெருஞ்சுவர் உள்ளது. இந்தநிலையில் வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள சீனபெருஞ்சுவரின் பகுதி இடிந்தது. ஷாஞ்சியாகு பகுதியில் டாஜிஸ்மென் என்ற இடத்தில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சுவர் இடிந்துள்ளது.மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சுவரின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த இப்பகுதியை சீர் செய்து புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு கடந்த 1368 முதல்
1644-ம் ஆண்டு வரை மிங் அரசர்களின் ஆட்சி காலத்தில் இது கட்டப் பட்டதாகும்.
இந்த ஆண்டு சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தலைநகர் பெய்ஜிங்கில் 60 ஆண்டு கால வரலாற்றில் எப்போதும் இல்லா அளவு பேய் மழை பெய்தது. அதில் 79 பேர் பலியாகினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக