சிரியாவின் சுகாதார அமைச்சர் நதீர் அல் ஹால்குய், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.டமாஸ்கஸ், அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் காரணமாக, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, இங்குள்ள
மக்கள் பலர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
சிரியா பிரதமராக இருந்த பரித் ஹிஜாப், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, அதிபர் ஆசாத், அவரை பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து ஹிஜாப், ஜோர்டானில் தஞ்சம் புகுந்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் படையில் தன்னை இணைத்துக் கொள்வதாக ஹிஜாப் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, சிரியா சுகாதார அமைச்சராக இருந்த நதீர் அல் ஹால்குய்யை, புதிய பிரதமராக அதிபர் ஆசாத் அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக