தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.12

குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் : மோடி


குஜராத் கலவரத்துக்காக எவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவதானால், அவர் ஒரு குற்றத்தை செய்து இருக்க வேண்டும். அது மிகப்பெரிய குற்றம் என்று நீங்கள் கருதினால், அந்த குற்றத்தை செய்தவரை ஏன் மன்னிக்க வேண்டும்?'' என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.வருங்கால பிரதமராக தங்களை
பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "குஜராத் மாநிலத்தில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். அதைத் தாண்டி மற்றவை குறித்து தற்போது நான் நினைக்கவில்லை'' என்று கூறிய நரேந்திர மோடி, அது தொடர்பாக மேலும் கருத்து சொல்வதை தவிர்த்துவிட்டார்.
பெரும்பாலும் சைவ உணவை உட்கொள்ளும் குஜராத் மக்களிடம் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விளக்கம் அளித்த அவர், நடுத்தர வகுப்பினர் உடல் அழகை பேணுவதில் செலுத்தும் அளவுக்கு உடல் நலத்தில் அக்கறைகொள்வதில்லை என்றார். ஒரு தாய் தனது மகளிடம் பால் அருந்தும்படி கூறினால், பால் அருந்தினால் உடல் குண்டாகிவிடும் என்று குடிக்க மறுப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

0 கருத்துகள்: