அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்க ளே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓ ட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.மெதுவாக வேகமெடு த்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலே யே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.கடந்த இரண்டு தினங்க ளாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊட
கங்களில் அதிக முக்கியம் பெற்றுள்ளார்கள்.கருத்துக் கணிப்பில் அதிபர் ஒபா மா 2 முதல் 4 வீதம் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார், ஆனால் இறுதி யில் யார் வெல்வார்கள் என்பது தெரியாத நிலையில் ஓட்டம் ஆரம்பித்துள்ளது.
கங்களில் அதிக முக்கியம் பெற்றுள்ளார்கள்.கருத்துக் கணிப்பில் அதிபர் ஒபா மா 2 முதல் 4 வீதம் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார், ஆனால் இறுதி யில் யார் வெல்வார்கள் என்பது தெரியாத நிலையில் ஓட்டம் ஆரம்பித்துள்ளது.
சுனாமிக்குள் அகப்பட்ட நாய் திசையை தீர்மானிக்க முடியாது, உயிர் தப்ப கால்களை அடிக்கலாம் என்பது போல வாய்ப்புள்ள திசையில் இருவரும் நீந்துகிறார்கள், தேர்தல் சுனாமிக்குள் சிக்குப்பட்ட இருவரில் கரையேறப் போவது யார்.?
இந்தக் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்..?
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் சீன பிரதமர் வென் ஜியாபோவை இன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வைத்து சந்தித்து பேச்சுக்களை நடாத்தினார்.
அத்தருணம் கருத்துரைத்த மேர்க்கல் யூரோ நாணயத்தை தளம்பலற்ற உறுதியான நாணயமாக வைத்திருப்பதற்கான அரசியல் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்று அவரிடம் எடுத்துரைத்தார்.
ஆகவே யாதொரு அச்சமும் இல்லாமல் சீனா ஐரோப்பாவில் தனது முதலீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
மேர்க்கலின் யூரோ நாணய உறுதிப்பாடு சீனப் பிரதமருக்கு மனதிற்குள் சிரிப்பை கொடுத்தாலும் வெளிப்படையாக அதைக் காட்டாது, சீனாவின் முதலீடுகள் தொடரும் என்று வாக்களித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக