தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.12

ஆஸாத் சர்வாதிகாரம் தூள் தூளாக்கபட வேண்டும் : பிரான்ஸ்


சிரியா நாட்டின் சர்வாதிகாரி ஆஸாத்தும், அவரு டைய கொலைகாரப் படைகளும் இனியும் அதிகா ரமிக்கதாக புவிப்பந்தில் இருக்க யாதொரு முகாந் திரமும் கிடையாது என்று பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் லவுறன்ற் பவுயுஸ் தெரிவித்துள்ளார்.சம ரசம் என்ற வீண் பேச்சுக்களை பேசுவதில் அர்த்தமி ல்லை, ஒட்டு மொத்தமாக இந்தக் கூட்டம் அடித்துத் தூக்கி வீசப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார்.சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்து ள்ள அகதிகள் முகாமில் பேசும்போதே மேற்கண்ட காட்டமான
கருத்துக்களை அவர் முன் வைத்துள்ளார்.
சொந்த மக்களை கைது செய்து தூக்கில் போடவும், கழுத்தறுத்து கொலை செய்யவும், பாடசாலைகளில் குண்டு போடவும் உலக அரங்கில் அரசுகள் அமைக்கப்படவில்லை, இத்தகைய அரசுகள் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற அவருடைய கருத்து உலக சமுதாயத்திற்கு புதிய நம்பிக்கையை தருவதாக அமைந்திருந்தது.
அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியாவிற்கான சமாதான தூதுவர் பதவியை கொபி அனான் தூக்கி வீசிய பின்னர், அவருடைய இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அல்ஜீரிய முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்டர் பராகிமி தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
சிரியாவில் உருவாகியுள்ள பிரச்சனைகளை சமாதானமான முறையில் தீர்த்து வைக்கும் ஐ.நாவின் சம்பிரதாயபூர்வமான கடமைகளை இவர் மேற்கொள்ள இருக்கிறார் என்று ஐ.நாவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்: