தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.12

சிரியாவில் இருந்து வெளியேறிய மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள்


இன்று திங்கட்கிழமை சிரியாவில் இருந்து மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள் அண்டை நாடான லெ பனானின் தலைநகர் பெய்ரூட்டை நோக்கித் தமது வெளியேற்றத்தைச் செய்துள்ளனர்.சிரிய மக்கள் புர ட்சி யுத்தத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு மீது ஐ .நா பிரேரித்திருந்த UNSMIS எனப்படும் ஐ.நா இன் யுத் த நிறுத்த கண்காணிப்புச் செயற்திட்டம் நேற்று ஞா யிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியானதை அடுத்தே  இந் நடவடிக்கை
மேற்கொள்ளப் பட்டுள்ளது. முதற்கட்டமாக ஞாயி ற்றுக்கிழமை 6 ஐ,நா கண்காணிப்பாளர்கள் வெளியேறியிருந்தனர்.

சிரியாவில் இன்னமும் எஞ்சியிருக்கும் ஐ.நா இன் ஒரு சில கண்காணிப்பாளர்களும் இன்னும் ஓரிரு தினங்களில் அந்நாட்டை விட்டு நீங்கவுள்ளனர்.
இந்நிலையில் ஹோம்ஸ் மாகாணத்தில் தற்போது ஐ.நா கண்காணிப்பாளர்கள் யாருமே இல்லாத சூழ்நிலை நிலவுகின்றது.

சிரியாவில் கடந்த ஏப்ரலில் தொடக்கத்தில் ஐ.நா இன் 6 அம்ச அமைதித் திட்டம்  அரபு சம்மேளத்தின் ஒப்புதலுடன் பிரேரிக்கப் பட்டிருந்தது. எனினும் வன்முறைகளைத் தடுக்க இயலாது இத்திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து சிரியாவுக்கான அரபு சமூகம் மற்றும் ஐ.நா இன் விசேட தூதுவரான கோஃபி அனான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தற்போது இவரது இடத்துக்கு ஐ.நா கடந்த வியாழக்கிழமை அல்ஜீரியாவைத் தாயகமாகக் கொண்ட பட்டதாரியான லக்தார் ப்ராஹ்மி ஐ நியமித்துள்ளது.
மேலும் சிரியாவுக்கான அமைதி ஒப்பந்தம் காலாவதியான போதும் சிரியாவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா தொடர்ந்து பாடுபடும் என UNSMIS இன் தலைவர் பபகர் காயே ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: