சுமார் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த ரோமானிய கப்பலின் பாகங்களை இத்தாலிய ஆழ்கடல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெனிவாவில் இருந்து 30கி.மீ. தொலைவில் வர்சாஸ் நகரையடுத்த கடல் பகுதியில் கடந்த 1930 முதல் மீனவர்கள் வலையில் கப்பலின் சிறிய பாகங்கள் சிக்கி வந்தன.குறிப்பாக, உணவு போத்தல்கள், குடுவைகள் கிடைத்து வந்தன. அவற்றில் மீன் ஊறுகாய்,ஒயின், எண்ணெய் போன்ற பொருட்கள் இருந்தன. இதையடுத்து இத்தாலி ஆழ்கடல் ராணுவ
பிரிவின் வீரர்கள் நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுக்கு மீனவர்களும் தகவல் கொடுத்து உதவி வந்தனர்.
பிரிவின் வீரர்கள் நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுக்கு மீனவர்களும் தகவல் கொடுத்து உதவி வந்தனர்.
தேடுதலில் நேற்று முன்தினம் வெற்றி கிடைத்தது. ஆழ்கடலில் மூழ்கி கிடந்த ரோமானிய கப்பலை வீரர்கள் கண்டுபிடித்தனர். அது உணவுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு கப்பல் என்பதும், 2,000 ஆண்டு பழமையானது என்றும் தெரிய வந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக