தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.12

துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி - நாளை ஆகஸ்ட் 11 ல் பதவியேற்கிறார்.


நாளை ஆகஸ்ட் 10ம் தேதியுடன் தற்போதைய குடி யரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி க்காலம் முடிவடைவதையடுத்து அந்தப் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது அறிந்ததே. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியே மீண்டும் போட்டியிட்டார். எதிர்கட்சியான பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணி வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நிறுத்தப்பட்டார். நேற்று
காலை  வாக்குபதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொ த்தம் 736 நாடாளுமன்ற உ
றுப்பினர்களின் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிந்தது. 490 வாக்குகள் பெற்று ஹமீத் அன்சாரி அபார பெருவெற்றி பெற்றார். ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகள் கிடைத்தன. அவரைவிட அன்சாரி 252 வாக்குகள் கூடுதலாக பெற்று மீண்டும் இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களே வாக்களித்தும் செல்லாத வாக்குகள் 8.

தொடர்ந்து இருமுறை குடியரசின் துணைத் தலைவராகும் வாய்ப்பு டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பிறகு,பெருமையை ஹமீது அன்சாரி பெற்றுள்ளார். இவரது தற்போதைய பதவிக்காலம் 10ம் தேதி வரை உள்ளது. எனவே, வரும் 11,ம் தேதி மீண்டும் இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக அன்சாரி பதவி ஏற்கிறார்.

0 கருத்துகள்: