ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து 35Km மேற் கே வர்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள சாக் மாவ ட்டத்தின் ஆளுநர் (Governor)முஹம்மட் இஸ்மால் வாஃபா நேற்று ஞாயிற்றுக் கிழமை இனம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளா ர்இவர் தனது அலுவலகத்திற்கு காலை காரில் சென் று கொண்டிருக்கும் போது நடு வீதியில் தலிபான்க ளால் இடைமறிக்கப் பட்டு துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டது. இதில் ஆளுநர் தலத்திலேயே கொல்லப் பட் டதுடன் அவர் மகன்
படுகாயமடைந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலிபான்கள் சார்பில் பேசும் பேச்சாளரான ஷபிஹூல்லா முஜாஹிட் தொலைபேசி மூலம் ஆப்கான் மீடியாக்களுடன் பேசுகையில் இத்தாக்குதலை நிகழ்த்தியது தலிபான்கள் தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.இதே பேச்சாளர் கடந்த மே 3 ஆம் திகதி மற்றொரு மீடியாவுக்கு பேட்டியளிக்கையில் ஆப்கான் அரசுக்கும் நேட்டோ படையினருக்கும் வேலை செய்பவர் எவராயிருப்பினும் அவர்கள் எமது தாக்குதல் இலக்குகள் ஆவர் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக