7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக நேஷன்ல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் ஃபாத்திமா ஆலிமா பேட்டி அளித்துள்ளார்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயுள் சிறைகைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. இதே போன்ற நடைமுறை தமிழக அரசாலும் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். அந்தவகையில் வருகின்ற செப்டம்பரில் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 24ஆம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக மாநிலத்தலைவி தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமின்றி கோவை, நெல்லை, மதுரை ஆகிய மாநகரங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருப்பதாக மேலும் தெரிவித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக