தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.12

மதுரை காவல் துணை ஆணையருக்கு பிடிவாரண்ட்!


விபத்து வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக பிறப்பித்த நீதிமன்ற ஆணையை வாங்க மறுத்து, நீதிமன்றத்துக்கும் வராத மதுரை காவல் துணை ஆணையருக்கு, ஈரோடு தலைமை குற்றவியல் நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார்.திருப்பூர் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த விபத்தில், ராஜாமணி என்பவர் பலியானார். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளராக இருந்த பேச்சுமுத்து பாண்டியன், வழக்கு பதிவுசெய்து, ஈரோடு முதன்மை தலைமை நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல்செய்தார். இவ்வழக்கில், முக்கிய
சாட்சியான ஆய்வாளர் பேச்சு முத்து பாண்டியன் தற்போது மதுரை திலகர் திடல் குற்றப் பிரிவு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமால், சம்மனையும் ஏற்க மறுத்து வந்ததைத் தொடர்ந்து அவருக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து, தலைமை குற்றவியல் நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: