துபாய் -
துபாயில் பணி புரிந்த இடத்தில் தம்முடன் பணி புரிந்த டிரைவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட தமிழர் நாதனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் வெளிநாடு வாழ இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.வைகோ எழுதியுள்ள கடிதத்தில்
'' “ துபையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுஉள்ள நாதன் என்ற தமிழரை
நம்பி வாழும், ஏழைக்குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டி, இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.நாதனின், இந்தியக் கடவுச்சீட்டு எண். F 3630594. முகவரி: த/பெ எஸ். முத்துவேல், தெற்கு மாதவி கிராமம், சிறுகன்பூர் (அஞ்சல்), சிறுவாச்சூர் (வழி), குன்னம் வட்டம், அரியலூர் மாவட்டம்.
நாதன், துபையில், கொம்பர்ட் இனிடில் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார். அஞ்சல் எண்.
28811தொலைநகல் எண்: 06-5620990.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, நாதனுக்கும், அவருடன் பணிபுரிகின்ற, ஆப்கன் நாட்டைச் சேர்ந்த இஃப்திகார் என்ற ஓட்டுநருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. நிறுவனத்தின் பொருள்களைக் கடத்திய அந்த ஓட்டுநரின் தவறான நடவடிக்கை குறித்து, நாதன் நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததாகச் சந்தேகப்பட்டு, ஓட்டுநர் இஃப்திகார், நாதனைக் கடுமையாகத் தாக்கி இருக்கின்றார். தம்மைக் காத்துக் கொள்ள நாதன் முயன்றபோது நடந்த எதிர்த்தாக்குதலில், ஓட்டுநர் இஃப்திகார் இறந்து போனார்.
நாதன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
2012 ஏப்ரல் 19 ஆம் நாள் வெளியான தீர்ப்பில், நாதனைக் சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது, நாதன் அபுதாபியில் உள்ள,
ALWAC HBA என்ற இடத்தில் உள்ள முதன்மைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.நாதனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனை, எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம். இந்தச் செய்தியால், நாதனின் ஏழைக்குடும்பம், இடிவிழுந்தது போல நிலைகுலைந்து போயுள்ளது. அவரது உறவினர்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றனர்.
நாதனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையை ரத்துச் செய்ய, உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டு, அவரைக் காப்பாற்றித் தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக